ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தியிலிருந்து நடிகைககள் தான் தமிழுக்கு அதிகம் வந்திருக்கிறார்கள். ஆனால், நடிகர்கள் வருவது மிகவும் குறைவாகவே இருக்கும். சமீப காலங்களில் தமிழ்ப் படங்களுக்கு வட இந்தியாவிலும் வரவேற்பு அதிகமாகி வருகிறது. ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட வசதியாக, அல்லது ஹிந்தியிலும் சேர்த்துத் தயாரிக்க தமிழ்ப் படங்களிலும் ஹிந்தி நடிகர்கள் இருந்தால் இந்திய அளவில் படத்தை எளிதில் கொண்டு போய்ச் சேர்க்க முடிகிறது.
அந்த ஒரு காரணத்தால்தான் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தில் அக்ஷய் குமார் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். இதனால், படத்திற்கான வியாபார எல்லை விரிவடைகிறது. அந்த வரிசையில் ஷங்கர் அடுத்து இயக்க உள்ள 'இந்தியன் 2' படத்தில் ஹிந்தி நடிகரான அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.
இது பற்றிய தகவலை கமல்ஹாசனே மும்பையில் தெரிவித்திருக்கிறார். 'இந்தியன் 2' படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க உள்ளார்கள் என்பதால் தான் அஜய் தேவகனும் படத்திற்குள் வந்திருக்கிறார்.
படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. படத்திற்கான மற்ற வேலைகள் முடிந்ததும், கமல்ஹாசன் 'பிக் பாஸ் 2' ஷுட்டிங்கை முடித்ததும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.