பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஒரு படமும், ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்பது குறித்து இதுவரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்க இருக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை நேற்று வெளியிட்டனர்.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்' படத்தின் டைட்டில் பாடலைப் பாடிய 'ஹிப் பாப் தமிழா' ஆதி இப்போது இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
இந்தப்படத்துக்கு அனிருத்தைத் தான் இசையமைப்பாளராக்க முதலில் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர் கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்பாளர் நோ சொல்லிவிட்டதால் ஆதியை கமிட் பண்ணியதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், ரஜினி உள்ளிட்ட மற்ற படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் இந்தப்படத்தில் அவர் இசையமைக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.