பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 38 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் அர்ஜூன். நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்துள்ள அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனையும், விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்தார். அதையடுத்து தான் இயக்கிய சொல்லிவிடவா படத்திலும் மகளை நடிக்க வைத்தார். இந்நிலையில், தனது மகள் தொடர்ந்து நடிப்பதை அர்ஜூன் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், அர்ஜூன் மறுத்துள்ளார். என் மகள் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது நானே உற்சாகப்படுத்திதான் நடிக்க வைத்தேன். என்னை ஆதரித்த சினிமா எனது மகளையும் ஆதரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். சினிமா மீது நான் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த தொழிலை நாம் நம்பவில்லை என்றால் வேறு யார் நம்புவார்கள் என்கிறார் அர்ஜூன்.