'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஒரு படத்திலும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இவற்றில் ராஜேஷ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக செய்தி வெளியிட்டனர். அது என்னவென்று தற்போது தெரிந்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அநேக படங்களுக்கு அனிருத், இமான் இசையமைத்து வந்த நிலையில் இப்போது இந்தப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் - ஆதி இணைவது இது தான் முதல்முறை.