ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2013-ல் அட்லி இயக்கத்தில் நடித்த ராஜா ராணிக்குப் பிறகு ஆர்யா நடித்த படங்கள் பெரிதாக வசூலிக்கவில்லை. இதனால் மந்தமான நிலையிலேயே இருந்து கொண்டிருந்த ஆர்யா, சரியான படவாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தோன்றினார். அதேபோல் சில படங்களில் நட்புக்காகவும் நடித்து வந்தார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தில் தற்போது வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான கஜினிகாந்த் படம் நீண்ட நாளைக்குப்பிறகு அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மிகப் பெரிய வெற்றி இல்லை என்றாலும், நல்ல வசூலையே கொடுத்துள்ளது. அதோடு, இந்த படத்தில் ஆர்யா முன்பை விட சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற விமர்சனங்களும் வெளியாகியிருக்கிறது.
அதனால், மீண்டும் உற்சாகமாகியிக்கும் ஆர்யாவைத்தேடி புதிய படவாய்ப்புகளும் செல்லத் தொடங்கியிருக்கிறது.