தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்றைய தேதியில் செட் ஆப் பாக்ஸ் இல்லாத வீடுகளே இல்லை. அந்த செட்ஆப் பாக்சால் ஒருவனுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ஓடு ராஜா ஓடு.
'ஜோக்கர்' பட நாயகன் குரு சோமசுந்தரம் நடிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில் செட் டாப் பாக்ஸ் எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விஸ்வரூபம் எடுத்து நாயகனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளனர். செல்லும் இடமெல்லாம் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகளை புதுப்புது காமெடி களத்துடன் கதையை நகர்த்தி உள்ளனர்.
குரு சோமசுந்தரத்துடன், நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சுவாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தீபக்பாகா மற்றும் பலர் நடித்துள்ளனர். தோஷ் நந்தா இசை அமைத்துள்ளார், ஜத்தின் சங்கர்ராஜ், சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விஜய் மூலன் டாக்கீஸ் சார்பில் விஜய் மூலன் தயாரித்துள்ளார்.