மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தரமணி படத்தை அடுத்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேரன்பு'. மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். தங்கமீன்கள் படத்தில் சாதனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவளுடைய அப்பாவுக்கும் இடையிலான விஷயங்கள் தான் இந்தப் படத்தின் கதை.
அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மம்முட்டி ஹீரோவாக நடித்திருப்பதால் பேரன்பு படத்தை மலையாளத்தில் டப் பண்ணி வெளியிடுகின்றனர். பேரன்பு படத்தின் மலையாள உரிமையை மம்முட்டியே வாங்கியுள்ளார்.
மம்முட்டி பிறந்த நாளான செப்டம்பர் 7-ம் தேதி பேரன்பு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.