இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா. கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமான இவர், அஞ்சனி புத்ரா, செமாக், சோலா படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கீதா கோவிந்தம், தேவதாசி, டியர் காம்ரேட் என 3 தெலுங்கு படத்திலும், யாஜ்மனா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
ராஷ்மிகா தான் அறிமுகமான படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை தீவிரமாக காதலித்தார். 2 வருடங்களாக காதலித்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் இந்த நிச்சயதார்த்தத்தை முறித்து திருமணத்தை ராஷ்மிகா நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிக நெருக்கமாக நடித்து வருவதாகவும், இது ரக்ஷித் செட்டிக்கு பிடிக்கவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடே நிச்சயதார்த்த முறிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனை இருவரும் மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.