சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தும்ஹரி சூலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார் ஜோதிகா. இதனை ராதாமோகன் இயக்கி உள்ளார், தனஞ்செயன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தைச் சேர்ந்த ஏ.எச்.காசிப் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் சமீபத்தில் உலக புகழ்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஜோதிகாவும், லட்சுமி மஞ்சும் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது:
சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. மலையாள தேசத்தில் தயாராகி வந்த இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஆம், ஜோதிகாவின் “காற்றின் மொழி“ திரைப்படம் மூலம் நாம் எல்லோரும் ஜிமிக்கி கம்மல் பாடலை மீண்டும் கேட்டு ரசிக்க போகிறோம்.
சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர். ஏற்கனவே ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது.
84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் புகழ் பெற்ற “ஜிமிக்கி கம்மல்“ மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பெற்று பயன்படுத்தியிருக்கிறோம். தமிழ் உருவான ஜிமிக்கி கம்மல் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் வாங்கியுள்ளது. என்றார்.