தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இளம் முன்னணி கதாநாயகன் என்கிற இடத்தை நடிகர் நிவின்பாலி எப்போதோ பெற்றுவிட்டார்.. என்றாலும் அவரது படத்தின் கதாநாயகிகள் பெரும்பாலும் புதுமுகங்களாகவோ, அல்லது ஒரு சில படங்களில் நடித்தவர்களாகவோ தான் இருந்து வந்தார்கள்..
இந்தநிலையில் தான் சீனியர் நடிகையான த்ரிஷாவுடன் முதன்முறையாக இணைந்து மலையாளத்தில் ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்தார் நிவின்பாலி. அதேபோல தற்போது நயன்தாராவுடன் இணைந்து லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்திலும் நடித்து வருகிறார்..
இவர்கள் இருவருடனும் நடித்துவிட வேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருந்ததா என கேட்டால், இரண்டுமே தற்செயலாக அமைந்தது தான் என்கிறார் நிவின்பாலி. சொல்லப்போனால் த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பதற்கு முன்னதாக, லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது உறுதியாகிவிட்டதாம். ஆனால் அந்தப்படம் துவங்க தாமதம் ஆனதால், த்ரிஷாவுடனான ஹே ஜூடு படம் முன்னதாக வெளியாகிவிட்டது என்கிறார் நிவின்பாலி.