ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகும் படம் 'நோட்டா'. இப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. 'அரிமா நம்பி, இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக மெஹ்ரீன் நடிக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அதன்பின் சத்தமில்லாமல் படத்தை எடுத்து வருகின்றனர். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம். படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதை உணர்த்தும்.
சத்யராஜ், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படம் விஜய் தேவரகொன்டாவுக்கு தமிழில் அழுத்தமான அறிமுகத்தைக் கொடுக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இப்படத்திற்கான வியாபாரம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. அமெரிக்காவில் வெளியிடும் உரிமையை பிரீஸ் பிரேம் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பமாகியுள்ளது.