வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
யுவன் சங்கர் ராஜாவின் 'YSR FILMS' நிறுவனமும், கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இணைந்து நடித்துள்ள படம் 'பியார் பிரேமா காதல்'.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகின்றன. இப்படம் கடந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. 'பியார் பிரேமா காதல்' படத்திற்கு 'U/A' சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்ததும், படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டார்கள். 'பியார் பிரேமா காதல்' படத்தை ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம்-2', திரைப்படம் ஆக்ஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. இதனால் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2'வும், யுவன் சங்கர் ராஜாவின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள' பியார் பிரேமா காதல்' படமும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்-2' படத்தை திரையிடவே தியேட்டர்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால் பியார் பிரேமா காதல்' படத்துக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்க வாய்ப்பிருக்கிறது.