ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப், நடிகை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த சமயத்தில் வெளியான ராம்லீலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு காரணம் அந்தப்படம் ரிவெஞ்ச் த்ரில்லராக எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் குடும்பம் மற்றும் அம்மா சென்டிமென்ட் ஆகியவை சமவிகிதத்தில் இருந்தது.
இந்தநிலையில் வழக்கமான தனது பாணியில் குழந்தைகளை டார்கெட் பண்ணி, 'புரபெஷர் டிங்கன்' என்கிற படத்திலும் நடிக்கிறார் திலீப். தற்போது தாயமார்களின் அனுதாபத்தை இன்னும் பெறவேண்டும் என்பதற்காக இந்தக்கதையிலும் குடும்பம் மற்றும் அம்மா சென்டிமென்ட்டுக்கு அதிக இடம் கொடுக்குமாறு கதையில் நிறைய மாற்றங்களை செய்யச்சொல்லி விட்டாராம் திலீப்.
பிரபல இயக்குனர் ரபி மெக்கார்டின் கதை எழுதும் இந்தப்படத்தில் மேஜிக்மேனாக நடிக்கிறார் திலீப். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருந்த சமயத்தில் தான் நடிகை விவகாரத்தில் கைதாகி சிறைசென்றார் திலீப். தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல முடிவெடுத்துள்ளார்கள்.
சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.