பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கடந்த 2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் த்ரிவேண்ட்ரம் லாட்ஜ் (திருவனந்தபுரம் லாட்ஜ் என்கிற படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. வி.கே.பிரகாஷ் டைரக்சனில் ஜெயசூர்யா, பாவனா, ஹனிரோஸ் நடித்திருந்த இந்தப்படம் நியூ ஜெனரேஷன் படம் என்கிற பாராட்டை பெற்றது. அதற்கு காரணம் இந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் அனூப் மேனன் தான்.
இதையடுத்து திருவனந்தபுரம் லாட்ஜ் படத்தின் இரண்டாம் பாகமாக மெட்ராஸ் லாட்ஜ் என்கிற படத்திற்கு கதையை எழுதி முடித்துவிட்டார் அனூப் மேனன்.. முதல் பாகத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்களே இதிலும் நடிக்க உள்ளார்களாம். தற்போது நித்யா மேனன் நடிக்கும் பிரண படத்தை இயக்கிவரும் வி.கே.பிரகாஷ் அதை முடித்துவிட்டு, இந்த மெட்ராஸ் லாட்ஜ் படத்தை இயக்கவுள்ளார்.