இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகை ரீமா கல்லிங்கல், எப்போதுமே பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர். அப்படித்தான் சமீபத்தில் ஒரு டிவி ஷோவில் பேசிய அவர், தான் படிக்கும் காலத்தில் தனது அம்மா, தனக்கு மீன்கறி தராமல் தனது அண்ணனுக்கு மட்டும் தந்ததாகவும், அப்போதிருந்தே, தன் வீட்டிலேயே ஆணாதிக்கத்தை கண்டு வளர்ந்தவள் தான் என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதேசமயம் கடந்த சில நாட்களாக கேரளாவை சேர்ந்த ஹனன் என்கிற கல்லூரி மாணவி காலையில் மீன் விற்று, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்துடன் கல்லூரி படிப்பையும் சேர்த்து கவனித்து வரும் விஷயம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது.
மலையாள நடிகரும், விக்ரம் வேதா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவருமான ஹரீஷ் பெராடி, இந்த இரண்டு செய்திகளையும் குறிப்பிட்டு, ஒரு பெண்ணோ ஆணுக்கு சமமாக தானும் மீன் விற்று கடினமாக உழைக்கிறார். இன்னொரு பெண்ணோ, தனக்கு மீன்கறி கிடைக்கவில்லை என புலம்பி அதை ஆணாதிக்கம் என்கிறார்.. என்ன முரண்பாடு பார்த்தீர்களா என ரீமா கல்லிங்கலை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார்.