தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக திரையரங்குகளில் சினிமா திரையிடப்படுவதற்கு சுமார் 35 வருடங்களுக்கு முன் சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையானது சென்ற ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, முதல் இந்தியப்படமாக இந்த வருடம் ரஜினியின் 'காலா' வெளியாகி அந்த பெருமையை தட்டி சென்றது..
இந்தநிலையில் .சவுதி அரேபியாவில் வெளியாகும் இரண்டாவது இந்தியப்படம் என்கிற பெருமையை பிருத்விராஜ் - பார்வதி - நஸ்ரியா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான கூடே என்கிற படம் பெற்றுள்ளது. வரும் ஆக-1ஆம் தேதி சவுதியில் வெளியாக இருக்கும் இந்தப்படம், அங்கே வெளியாகும் முதல் மலையாளப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.