'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்த போது டிவி சீரியல் போல் உள்ளது என்று கிண்டலடித்தவர்கள் கூட படத்தின் வெற்றியையும், வரவேற்பையும் பார்த்து வாயடைத்துப் போய் உள்ளனர். சினிமாவிலேயே சிலர் அந்தப் படத்தைப் பற்றி கிண்டலடித்த விஷயங்களும் நடந்தது. அப்படி கிண்டலடித்தவர்களே இப்போது குடும்பக் கதைகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் மகிழ்ச்சியான விஷயம்.
தியேட்டர் பக்கம் வர மறந்தவர்களைக் கூட 'கடைக்குட்டி சிங்கம்' படம் கூட்டி வந்ததாக தியேட்டர்காரர்கள் பலரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்கள். இதனால், மக்கள் குடும்பப் பாங்கான படங்களைக் கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு வந்துள்ளது. அதனால், தயாரிப்பாளர்கள் பலரும் குடும்பக் கதைகளை வைத்துள்ள இயக்குனர்களைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்.
இளமையான படங்களை இளம் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்த பல கோடிகள் வேறு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், குடும்பப் படங்களுக்கு அப்படியில்லை, குறைவாக செலவு செய்து நிறைவாக லாபம் சம்பாதிக்கலாம். சிலரோ, வேறு மொழிகளில் வெளிவந்து ஹிட்டான படங்களின் ரீமேக்கை வாங்க முயற்சித்து வருகிறார்கள்.
அந்த விதத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இது போல் மேலும் பல தேடல்கள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அனைத்திற்கும் காரணம் 'கடைக்குட்டி சிங்கம்'.