ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் 'கபாலி, காலா' இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள், வசூல் படங்கள் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டார்கள். ஆனால் இரண்டு படங்களையும் நம்பி தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வெளியிட்டவர்கள், திரையிட்டவர்கள் பெரிய நஷ்டத்துக்கு ஆளாகினர். அந்த இரண்டு படங்களின் தோல்வி ரஜினிகாந்தின் தெலுங்கு மார்க்கெட்டை நன்றாகவே வீழ்த்திவிட்டது. இதனால், '2.0' படத்தின் உரிமையை வாங்கி வைத்திருப்பவர் கலக்கத்தில் உள்ளதாக டோலிவுட் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
'2.0' படத்தின் தெலுங்கு உரிமையை மட்டும் சுமார் 90 கோடி ரூபாய்க்கு முன்னணி வினியோகஸ்தர் ஒருவர் வாங்கியுள்ளாராம். அதோடு படத்திற்காக 20 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளாராம். ஆனால், 'கபாலி, காலா' படங்களின் தோல்வியில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட சரிவு காரணமாக '2.0' படத்தின் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.
மேலும், பட வெளியீட்டின் தாமதமும் அவரை நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறதாம். படத்தின் விலையைக் குறைத்தால் மட்டும் வாங்க அவர் விரும்புவதாகவும் தயாரிப்பு நிறுவனம் விலையைக் குறைக்கவில்லை என்றால் கொடுத்த முன்பணத்தைத் திரும்பக் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வினியோகஸ்தர் படத்தின் உரிமையைத் தக்க வைப்பதிலிருந்து பின்வாங்கிவிட்டால், வேறு சில வினியோகஸ்தர்கள் அவர்கள் சொல்லும் விலைக்கு படத்தை வாங்கத் தயாராக உள்ளார்களாம்.
உலக அளவில் '2.0' படத்தை இந்தியாவின் பெரிய வெளியீடாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் கிராபிக்ஸ் கம்பெனிகளின் தாமதத்தால் படத்தின் மீதான இமேஜ் குறைந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் '2.0' படம் முறியடித்து பெரிய வரவேற்பைப் பெறும் என்றும் ரஜினி ரசிகர்களும், ஷங்கர் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.