மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாகார்ஜூனாவுக்கு பாலிவுட் புதிதில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு லாக் கார்கில் படத்தில் நடித்தார். சஞ்சய்தத், அஜய் தேவ்கன் ஆகியோருடன் நடித்தார். கார்கில் யுத்தம் தொடர்பான இந்தப்படத்தில் ராணுவ தளபதியாக நடித்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பிரம்மாஸ்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அயன் முகர்ஜி இயக்குகிறார். அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியாபட், டிம்பிள் கபாடியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இது பிரமாண்டமாக உருவாகி வரும் பேண்டஸி படம். கரண் ஜோகர் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். லண்டன், மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளிவருகிறது. படத்தின் பட்ஜெட் 200 கோடி என்கிறார்கள்.