'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படம் அதிரண்டிகி தாரேதி. திருவிக்ரம் இயக்கிய இந்தப் படத்தில் பவன் கல்யாண், சமந்தா, பிரணிதா, நதியா, போமன் இரானி, பரம்மானந்தம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார், பிரசாத் மொரல்லா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா தயாரித்திருந்தது.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. இதற்கான உரிமத்தை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. விஜய் அல்லது அஜித் நடிக்கலாம் என்று தெரிகிறது. பேமிலி மற்றும் ஆக்ஷ்ன் படமான இந்தப் படம் ஆந்திர அரசின் 4 நந்தி விருதுகளை பெற்றது. ஏற்கெனவே கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும், ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது.