பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தலைப்பைப் பார்த்ததும் 'வட சென்னை' டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனுஷ் கொடுத்துள்ள அழுத்தமான முத்தம் பற்றிய செய்தி என நினைத்துவிட வேண்டாம். ஆனால், இதுவும் ஒரு அழுத்தமான பதிவு பற்றிய செய்திதான். தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள், கதாபாத்திரங்கள் என உலக அளவில் பெயர் எடுத்தவர் கமல்ஹாசன். அவருடைய 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது டிரைலரையே பின்னுக்குத் தள்ளி முன்னணியில் சென்று கொண்டிருக்கிறார் தனுஷ்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வட சென்னை' படத்தின் டீசர் நேற்று முன்தினம் யு டியூபில் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே அந்த டீசர் 30 லட்சம் பார்வைகளைக் கடந்தது. அதே சமயம், கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் இரண்டாவது டிரைலர் 11 லட்சம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது.
யு டியூப் டிரென்டிங்கிலும் 'வட சென்னை' டீசர் முதலிடத்தில் இருக்கிறது. 'விஸ்வரூபம் 2' இரண்டாவது டிரைலர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 'விஸ்வரூபம் 2' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளது. அதற்குள்ளாக கமல்ஹாசன் ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினால்தான் 'விஸ்வரூபம் 2' பற்றி ஏதாவது ஒரு விஸ்வரூபம் கிளம்பும்.