நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகை என நயன்தாராவை சிலர் சொன்னாலும், நயன்தாராவுக்கே தனது படங்களால் 'டப்' கொடுக்கும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உயர்ந்து வருகிறார். அடுத்த சில மாதங்களில் வெளிவர உள்ள முக்கிய படங்களில் ஐஸ்வர்யாவும் நாயகியாக இருக்கிறார். அவை அனைத்தும் பெரிய படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம், சாமி ஸ்கொயர்', தனுஷுடன் 'வட சென்னை', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்'. இந்தப் படங்களில், இருக்கும் நாயகிகளில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா இருந்தாலும் அவருடைய கதாபாத்திரங்கள் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என அந்தப் படங்களைப் பற்றி விசாரித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றோடு ஐஸ்வர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடித்துள்ள 'கனா' படமும் வெளிவர உள்ளது.
2018ம் ஆண்டு முடிந்த பின் இந்த வருடப் படங்களின் பட்டியலை திரும்பிப் பார்க்கும் போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கதாபாத்திரங்களையும் கவனிக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள். 'காக்கா முட்டை' கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது உயரப் பறக்கும் கழுகு நாயகியாக மாறிவிட்டார்.