பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
வித்யாபாலன் நடித்து ஹிந்தியில் வெளியான துல்ஹாரி சூலு படம் தமிழில், காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. ராதாமோகன் இயக்கி உள்ளார். தனஞ்செயன் தயாரித்துள்ளார். வித்யாபாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். அவரது கணவர் கேரக்டரில் விதார்த் நடித்துள்ளார். லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி ஒரே ஷெட்யூலில் முடிந்திருக்கிறது. கடந்த 25-ம் தேதியுடன் ஜோதிகா நடித்த போர்ஷன் முடிந்தது. 28ந் தேதியுடன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. படம் வருகிற அக்டோபர் 18ந் தேதி ஜோதிகா பிறந்த நாள் அன்று வெளிவருகிறது.
"எல்லா பணிகளும் ஏற்கெனவே முன் திட்டமிடப்பட்டிருந்ததால் படப்பிடிப்பு எந்த பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவடைந்தது. படத்திற்காக பிரமாண்ட பொருட்ச்செலவில் ரேடியோ ஸ்டேஷன் செட் போட்டிருந்தோம். இது படத்தில் பேசப்படுவதாக இருக்கும். தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அக்டோபர் 18-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.