டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் ஆர்டினரி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதா சிவதாஸ். அதன் பிறகு பல மலையாள படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அச்சயான்ஸ் என்ற படத்தில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார்.
இந்த நிலையில் ஸ்ரீதா சிவதாஸ் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக வருகிறார். சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. அதில் சந்தானம் ஜோடியாக நடிக்க ஸ்ரீதா சிவதாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதில் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி. ஆனந்தராஜ், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இயக்குகிறார். இதில் ஸ்ரீதா மலையாளப் பெண்ணாகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.