விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
இந்திப் படத்தில் நடித்து விட்டு தமிழ் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் திஷா பாண்டே. அதற்கு பிறகு மயங்கினேன் தயங்கினேன், கீரிப்புள்ள, மனதில் மாயம் செய்தாய், உள்பட சில படங்களில் நடித்தார். சரியான வாய்ப்பு இல்லாமல் மீண்டும் இந்திப் பக்கமே சென்று விட்டார்.
மீண்டும் தமிழ்படம் இரண்டாம் பாகத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். சிவாவுக்கு ஜோடியா நடித்த திஷா இப்போது காமெடி ஹீரோ லொள்ளுசபா ஜீவா ஜோடியாக நடிக்கிறார். படத்தின் பெயர் கொம்பு.
இந்தப் படத்தில் இவர்கள் தவிர பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, காயத்ரி, அஷ்மிதா உள்பட பலர் நடிக்கிறார்கள். தேவ்குரு இசை அமைக்கிறார், சுதீப் ஒளிப்பதிவு செய்கிறார். ஈ.இப்ராஹிம் இயக்குகிறார் ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி தயாரிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது:
இது ஒரு காமெடி திகில் படம். வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு படமாக்கப்பட்டுள்ளது. ஒரு ஹீரோவுக்கான தகுதி அனைத்தும் உடையவர் ஜீவா. அவரை சரியாக இதில் பயன்படுத்தியிருக்கிறோம். திஷா பாண்டே அழகும், திறமையும் இருந்தும் அதை பயன்படுத்த வாய்ப்பு அமையவில்லை. இதில் அமைத்து கொடுத்திருக்கிறோம் என்றார்.