தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் மூலம் தமிழ்நாடெங்கும் தெரிந்த ஒரு நடிகையாக மாறியிருப்பவர் சாயிஷா. நேற்று அவர் நடித்த 'ஜுங்கா' படமும் வெளிவந்துள்ளது. அடுத்த வாரம் ஆர்யாவுடன் நடித்துள்ள 'கஜினிகாந்த்' படமும் வெளிவர உள்ளது. குறுகிய இடைவெளிக்குள் அடுத்தடுத்து சாயிஷாவின் மூன்று படங்கள் மக்களைச் சென்றடைவதில் சாயிஷாவின் சந்தோஷத்திற்கு எல்லை இருக்காது.
உடலை ரப்பராக வளைத்து அவர் நடனமாடுவதற்கு பல நட்சத்திரங்களும் ரசிகர்கள். நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் காட்டினால் அடுத்த சில வருடங்களுக்கு தமிழ்நாட்டு ரசிகர்களின் கனவுக்கன்னியாக சாயிஷா இருப்பார் என்கிறார்கள்.
தமிழில் இன்னமும் பேச முயற்சிக்காத சாயிஷா இப்போது தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். அதோடு, இயக்குனர்களிடம் வசனத்தை தமிழிலேயே சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாராம். விரைவில் சாயிஷா தமிழில் சத்தமாகப் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.