நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களையும், கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர் என்ற பெயரை விஜய் சேதுபதி ஆரம்பத்திலிருந்தே பெற்று வருகிறார். சில கதாபாத்திரங்களில் அவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று சொல்லுமளவிற்கும் நடித்துவிடுவார். நேற்று வெளியான 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புப் பற்றி இருவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விஜய் சேதுபதி அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு மட்டும் பெயர் கிடைக்காமல் மற்றவர்களுக்கும் பெயர் கிடைக்கும்படி செய்துவிடுகிறார். அதில் எந்தவிதமான பாரபட்சமும் அவர் பார்ப்பதில்லை. அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிலரையாவது அப்படி அடையாளம் சொல்லிப் பார்க்க முடியும்.
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தில் ராகுல் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது. தாத்தா என்பதையும் மீறி அசத்தியிருந்தார் ராகுல் தாத்தாவாக நடித்த உதயாபானு.