ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் சீனுராமசாமியின் கண்ணே கலைமானே படத்தில் நடித்து முடித்துள்ள தமன்னா, தற்போது தெலுங்கில் வெங்கடேசுடன் எப்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமன்னா, அமெரிக்க டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை தமன்னா திருமணம் செய்ய இருப்பதாகவும், இணையதளங்களில் செய்திகள் வைரலாகின. இதற்கு தமன்னா தனது டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில், ஒருநாள் நடிகர், மறுநாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர் என என் திருமணம் பற்றிய வதந்திகளை பரப்புகிறார்கள். காதல் எனக்கு பிடிக்கும் என்றாலும் ஆதரமில்லாத வதந்திகளை ஏற்க முடியாது. நான் இப்போது தனியாக மகிழ்ச்சியாக உள்ளேன். என் பெற்றோர் மாப்பிள்ளை தேடவில்லை. சினிமாவை தான் தற்போது காதலித்து வருகிறேன். படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி செய்திகளை பரப்புகிறார்கள்.
திருமணம் என்பது புனிதமான ஒன்று. நான் திருமணம் செய்து கொண்டால் அனைவருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்து கொள்வேன். அதனால் எனது திருமணம் குறித்து யாரும் கற்பனையான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று டாக்டர் குறித்த திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமன்னா.