'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சூர்யாவின் '2D' எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான படம் 'கடைக்குட்டி சிங்கம்'. சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள, கடைக்குட்டி சிங்கம், விவசாயம் மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 358 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட கடைக்குட்டி சிங்கம் இரண்டு வாரங்களுக்குப் பிறகும், 255 திரையரங்குகளில் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
கடந்த வார நிலவரப்படி கடைக்குட்டி சிங்கம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு சுமார் 15 கோடி ஷேர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. தற்போதைய தகவலின்படி 18 கோடியைத்தாண்டி ஷேர் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
உண்மையிலேயே கடைக்குட்டி சிங்கம் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் ஜாக்பாட்தான்.