சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
விஜய்சேதுபதியின் 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' நிறுவனமும், அருண்பாண்டியனின் 'A&P GROUPS' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ஜுங்கா படத்தை கோகுல் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார', ஜீவா நடிப்பில் 'ரௌத்திரம்', கார்த்தி நடிப்பில் 'காஷ்மோரா' ஆகிய படங்களை இயக்கியவர் இவர். காமெடி கலந்த 'டான்' கதையாக ஜுங்கா படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். வயதான டான் ஆக ராதாரவி நடிக்கும் இந்தப்படத்தில் யோகி பாபுவுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்பதால் அந்தப் பணத்தை வெளிநாட்டு பிசினஸிலிருந்து எடுக்க திட்டமிட்டனர். மலேஷியா உரிமையும் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
எனவே மலேசியாவில் 'ஜுங்கா' படத்தை நேற்று பிரத்தியேக காட்சியாக திரையிட்டனர். இதற்காக 'ஜுங்கா' படக்குழுவினர் மலேசியா பயணமானார்கள். ஆனால் 'ஜுங்கா' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.