மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், இயக்குநர் கோகுலும் இணைந்துள்ள 'ஜுங்கா' இன்று வெளியாகிறது. 'வனமகன்' படத்தின் அறிமுக நாயகியான சாயிஷா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மடோனா செபாஸ்டியனும் இப்படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்துள்ளார். 'காதலும் கடந்து போகும்', 'கவண்' ஆகிய படங்களில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்தவர் இவர்.
இந்த படத்தை விஜய்சேதுபதியின் 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸும்', அருண்பாண்டியனின் 'ஏ&பி குரூப்ஸ்' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு, இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.
ஜுங்கா படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார் என்று ஜுங்கா படத்தின் புரமோஷன் செய்திகளில் தெரிவித்து வருகின்றனர்.
யோகி பாபுவின் பேரைச் சொன்னால் தான் 'ஜுங்கா'வைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று தயாரிப்பாளர்களே நினைக்கிறார்கள் போலிருக்கிறது.