பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நாட்டுப்புற பாடல்களில் கலக்கி வருகிற ஜோடி செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி. செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் டைட்டில் வென்றார். இருவரும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கச்சேரி நடத்தி வருகிறார்கள். செந்தில் கணேஷின் "ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல...", "சின்ன மச்சான் செவத்த மச்சான்" பாடலும் மிகவும் பிரபலம்.
இந்த பாடலை அவர்களை பாடவைத்தே படத்தில் பயன்படுத்துகிறார்கள். பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2ம் பாகத்தில் இந்த பாடலை இசை அமைப்பாளர் அம்ரிஷ் மெருகேற்றி அவர்களையே பாடவைத்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது:
சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய "சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள " என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.
இந்த பாடலுக்கு பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. என்றார் ஷக்தி சிதம்பரம்.