இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வரும் நிலையில், "வாரேன் வாரேன் சீமராஜா..." என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். யுகபாரதியின் பாடல் வரிகள் எழுதியுள்ளார். திவாகர், கவிதா கோபி பாடியுள்ளனர்.
இந்தப்பாடலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல் வெளியான அரைமணிநேரத்தில் 1.25 லட்சம் பேர் யூ-டியூப்பில் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.