அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக இருந்து முன்னணி ஹீரோவாக மாறிவரும் டொவினோ தாமஸ்,கைநிறைய படங்கள் வைத்துள்ளார். சமீபத்தில் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியான அபியும் அனுவும் படம் இவரது நடிப்பை தமிழ் ரசிகர்களுக்கு பறை சாற்றியது.
இந்தநிலையில் மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள மரடோனா படம் நாளை மறுநாள், ஜூலை-27-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இருவருக்குமே சம முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தப்படம் ரசிகர்களை ஏமாற்றாது என்கிறார் படத்தின் இயக்குனர் விஷ்ணு நாராயணன். ஷர்மிளா நாயர் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்
இதில் டொவினோ தாமஸ், தனுஷின் மாரி -2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பதும், சமீபத்தில் வெளியான கோலிசோடா-2 படத்தில் செம்பான் வினோத் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.