ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு அதன்பிறகு இன்னும் புதிய படங்கள் கமிட்டாகவில்லை. என்றாலும் சில மெகா படங்களுக்காக தொடர்ந்து கல்லெறிந்து வருகிறார்.
தெலுங்கில் முன்வரிசை நடிகர்களின் படங்கள் இல்லாதபோதும் இரண்டாம் தட்டு நடிகர்களின் படங்களை கைப்பற்றி பிசியாக நடித்து வருகிறார். இதை பயன்படுத்தி ஒரு தெலுங்கு பட தயாரிப்பாளர் தனது படத்தில் காஜல் அகர்வாலை ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட அழைத்திருக்கிறார்.
இதற்கு உடனடியாக மறுப்பு சொன்ன காஜலிடம் பரிசீலனை செய்யுமாறு சொன்னபோதும் அவர் உடன்படவில்லையாம். அதோடு, இப்போதும் நான் சினிமாவில் பிசியாகத்தான் இருக்கிறேன். இதுபோன்ற பாடல்களில் நடனம் ஆட மாட்டேன் அடித்து சொல்லிவிட்டாராம் காஜல் அகர்வால்.