‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கைதி எண் 150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், நயன்தாரா, விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு, தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.
சுதந்திர போராட்ட காலத்து கதை என்பதால் இந்த படத்திற்காக அனைவருமே அந்த காலகட்டத்து கெட்டப்பில் நடிக்கிறார்கள். இதில் நயன்தாரா சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்க, தமன்னா பாகுபலி படத்தைப்போலவே ஒரு புரட்சிப் பெண்ணாக நடிக்கிறார்.
இந்த படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தபடியாக சுதந்திர போராட்டம் நடப்பது போன்ற ஒரு பெரிய சண்டை காட்சி படமாக்க பிரமாண்ட செட் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிரஞ்சீவியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி சைர நரசிம்ம ரெட்டி படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.