பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் - 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷுக்கும் கௌதம் மேனனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெறாமலே இருந்தது.
தனுஷுக்கு சம்பள பாக்கியை செட்டில் பண்ணியதை அடுத்து தற்போது தனுஷ் தேதி கொடுத்துள்ளார். அதையடுத்து, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தனுஷ் - சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.
இதற்கிடையில், படத்தின் தலைப்புக்கான வடிவமைப்பை தோட்டா வடிவத்தில் மாற்றியிருக்கிறார்கள். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்து விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் வாசுதேவ மேனன். இனி எல்லாம் நன்மையில் நடக்கும் என நம்புகிறார்.