தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிருத்விராஜ் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாகும் லூசிபர் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தில் விவேக் ஓபராய் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்தநிலையில் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை தந்த மலையாள இயக்குனரான பாசில் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
மகன் பஹத் பாசில் சினிமாவுக்கு நடிக்க வந்த பின் பல வருடமாக சினிமாவை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வரும் இயக்குனர் பாசிலை, தனது லூசிபர் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினாராம் மோகன்லால். பின்னே.. மோகன்லாலை திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு இயக்குனர் பாசில் தானே..? பாசிலும் இதற்கு சம்மதம் சொல்லிவிட்டாராம். இந்தப்படத்தில் ஒரு துறவியாக, மோகன்லாலுக்கு காட்பாதர் போன்ற கேரக்டரில் நடிக்கிறாராம் பாசில்.