இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை அடுத்து ராட்ஸசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் அமலாபால். இந்த நிலையில், ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்காக பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்த அவருக்கு தற்போது நரேஷ் இயக்கத்தில் அர்ஜூன் ராம்பால் நாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுபற்றி அமலாபால் விடுத்துள்ள செய்தியில், பாலிவுட்டில் இருந்து ஏற்கனவே சில படவாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த படங்களில் எனக்கான கதாபாத்திரங்கள் திருப்தியாக இல்லாததால் நடிக்கவில்லை. இப்போது நரேஷ் சொன்ன கதை சிறப்பாக உள்ளது. அதனால் ஒரு நல்ல படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகிறேன் என்கிற மகிழ்ச்சியில் இருக்கிறேன் என்று கூறும் அமலாபால், அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக சொல்கிறார்.