‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சினிமா வாய்ப்பு இல்லாத நடிகர் நடிகைகள் இப்போது வெப் சீரியலுக்கு மாறி வருகிறார்கள். பெரிய நிறுவனங்கள் இவற்றை தயாரிப்பதால் சம்பளத்துக்கும் பிரச்னை இல்லை என்பதால் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பிரியாமணி, சுனைனா உள்ளிட்ட பலரைத் தொடர்ந்து தற்போது பூஜா தேவரியாவும் வெப் சீரியலுக்கு வந்து விட்டார்.
மயக்கம் என்ன படத்தில் அறிமுகமாகி, இறைவி படத்தின் மூலம் பேசப்பட்டவர் பூஜா. அதன் பிறகு குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, ஆந்திரா மெஸ், படங்களில் நடித்தார் தற்போது கன்னடப் படத்திலும் அறிமுகமாகியிருக்கிறார். வல்லவனுக்கு வல்லவன் என்ற தமிழ் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த நிலையில் கதவு எண் 403 என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். யாஸ்மின் இயக்குகிறார். இது ஒரு நடிகையின் கதை. நடிகையாக பூஜா நடிக்கிறார். கோகுல் ஆனந்த் ஹீரோ. இவர்கள் தவிர பிரவீன் குமார், சையத், ஹரிணி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஊர்வசி, மா.கா.பா.ஆனந்த், அரவிந்த் ஆகாஷ், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். டிரண்ட் லவ்ட் நிறுவனம் தயாரிக்கிறது.