'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக நடிக்கும் படம் 'என்ஜிகே'. இன்று ஜுலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்கள். 'என்ஜிகே' என்றால் என்ன என்பது பற்றி இத்தனை நாட்களாக இருந்த சஸ்பென்சை நேற்று இரண்டாவது பார்வை மூலம் உடைத்துவிட்டார்கள்.
'என்ஜிகே' என்றால் 'நந்த கோபாலன் குமரன்' என தமிழிலும், தெலுங்கில் 'நந்த கோபால கிருஷ்ணா' என்றும் 'என்ஜிகே'விற்கான விவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பார்த்தபோது இது ஒரு அரசியல் படமாக இருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இப்போது 'நந்த கோபாலன் குமரன்' என சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது படத்தில் சூர்யா மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாரா அல்லது மூன்று தோற்றங்களில் நடிக்கிறாரா என அடுத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இரண்டாவது பார்வையில் சூர்யா சீரியசான மேல்நோக்கிய பார்வையில் சட்டை காலரை மட்டும் தூக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். பின்னணியில் பலரும் கொண்டாட்டமாக இருக்கும், கடைசியில் காவல்துறையினரும் உள்ளார்கள்.
சூர்யா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை இந்த போஸ்டர் பெற்றுள்ளது. செல்வராகவன் - சூர்யா கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இந்த இரண்டாவது பார்வைக்குப் பிறகு இன்னும் கொஞ்சம் கூடுதலாகியுள்ளது.