'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நடிகர் சிவாஜி கணேசன். இவரின் 17-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் சிவாஜியின் மணிமண்டபத்திற்கு சென்று அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதேப்போன்று ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜியின் குடும்பத்தாரும் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் ஒய்ஜி.மகேந்திரன், தன் நாடக குழுவினருடன் மதுரையில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.