Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமுத்திரகனி சமூக போராளியாக நடிக்கும் "பற"

21 ஜூலை, 2018 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Samuthirakanis-next-film-Para

கலிங்கா திரைப்படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "பற". இத்திரைப்படத்தை பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய கீரா இயக்குகிறார்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும், அநீதிகளுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக, தன் குழந்தையை பறிகொடுத்த தந்தையாகவும், காதலர்களின் காவலனாகவும் சமுத்திரகனி நடித்திருக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு படமாகிக் கொண்டிருக்கிறது.

படம் பற்றி இயக்குனர் கீரா கூறியதாவது.... இது நம் அன்றாட வாழ்வில் தினசரி செய்திகளாக படித்தும், கேட்டும் கடந்து போகிற எளிய மக்களின் வலிமையான காதல் பற்றிய படம். துயரங்களை மட்டுமே சுமக்கும் மனிதர்கள், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வாழ்க்கையினை சுமந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், வெவ்வேறு இடத்திலிருந்து ஒரே இடத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயமும் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுமே கதையின் பரதான கன்னியாக இருக்கின்றது.

பிளாட் பாரத்தில் வாழ வழியற்ற ஒருவனும், ஒரு கிராமத்திலிருந்து கிளம்பும் காதலர்களும், வயதான காலத்தில் தனிமையிலிருந்து விடுபட கிளம்பும் முதியோர்களும், ஒரு திருடனும், ஒரு வழக்கறிஞர், ஒரு கட்சி தலைவரும், போலீஸூம், கிளப் டான்ஸரும் என பல்வேறு மாந்தர்களின் வாழ்க்கை ஓர் இரவில் தொடங்கி ஓர் பகலில் முடியும் 12மணி நேர கதைதான் "பற".

படத்தின் படப்பிடிப்பு நாகர்கோயில், ராயபுரம், எண்ணூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் சமுத்திரகனி, சாந்தினி, முனிஸ்காந்த், நிதிஷ் வீரா, முத்துராமன், சாஜீ மோன், வெண்பா, தீக்கதிர் குமரேசன், கம்பம் மீனா, சூப்பர் குட் சுப்ரமணி, பேராசிரியர் செல்வக்குமார், அஸ்மிதா, வின்னர் ரமச்சந்திரன், பிரின்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in