பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் - IARA , என்ற விருதுகள் வழங்கும் நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் 22ம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. 2014ம் ஆண்டு முதல் உலக அளவில் சாதனை புரிந்து வரும் நாடகம், இசை, சினிமா, டிவி ஆகிய துறைகளில் உள்ள சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்கள்.
2018ம் ஆண்டுக்காக வழங்கப்பட உள்ள 24 விதமான விருதுகளில் சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதுப் போட்டியில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யும் இடம் பெற்றுள்ளார். 'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக அவர் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். அவருடன் ஜோஷுவா ஜாக்சன், கென்னத் ஒகோலி, அட்ஜெடே அனங், கும்புலானி கே சபியா, டாய்ம் ஹசன் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
ரசிகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் 24 விதமான விருதுகளுக்கும் போட்டியிடுபவர்களிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வாக்களிப்பது ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஏற்கெனவே, இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட விருதுகள் என்ற விருதுக்காக சிறந்த துணை நடிகருக்கான போட்டியில் விஜய் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த விருதுக்காக விஜய் தேர்வாகவில்லை. ஆனால், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதை 'மெர்சல்' படம் பெற்றது.