'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
2 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்த படம் பிரமோற்சவம். மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா, நரேஷ், சத்யராஜ், ரேவதி, ஜெயசுதா, ஈஸ்வரிராவ், நாசர், தணிகலபரணி, துளசி உள்பட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் அதாலா இயக்கி இருந்தார், மிக்கி ஜே.மேயர், கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார்கள், ஆர்.ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். பிவிபி சினிமாவுடன் இணைந்து மகேஷ்பாபுவே தயாரித்திருந்தார்.
தற்போது இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படத்திற்கு அனிருத் என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் பிரமாண்ட பேமிலி என்டர்டெயினராக வெற்றி பெற்றதால் அது மாதிரியான இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள். தமிழ் மொழிமாற்று பணிகளை ஏஆர்கே ராஜராஜ செய்துள்ளார். சித்ரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பத்ரகாளி பிலிம்ஸ் வெளியிடுகிறது. வருகிற ஆகஸ்ட் 3ந் தேதி வெளிவருகிறது.