ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கமல்ஹாசனின் உதவியாளராக இருந்து கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. இவர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப் படத்தில் இளம் ஜோடிகளாக அக்ஷ்ரா ஹாசனும் அவருக்கு ஜோடியாக நாசரின் இளைய மகன் அபி மெக்தியும் நடிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
சினிமாவில் அறிமுகமாகும் நாசரின் இரண்டாவது வாரிசு அபி மெக்தி. மூத்த மகனான லுத்புதீன், சைவம் படத்தில் அறிமுகமாகி பறந்து செல்ல வா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் நாசர். அதோடு நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இதனால் கமலின் சிபாரிசின் பேரில் அபி மெக்திக்கு அக்ஷ்ரா ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.