நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
கமலின் பாபநாசம் படத்தில் அவரது மூத்த மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் ஆரம்ப காலத்தில் சினிமா, சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் பின்னர் தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்ற நிவேதா தாமஸ், தொடர்ந்து அங்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். என்றாலும், தமிழ் சினிமாவில் தனக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாதது அவரை பீல் பண்ண வைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது சில டைரக்டர்களை சந்தித்து தமிழில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாகி விட வேண்டும் என்கிற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் நிவேதா தாமஸ்.