இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அதர்வா கதாநாயகனாகவும், மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும் நடிக்க, 'இவன் தந்திரன்' படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கி வரும் படம் 'பூமராங்'.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இந்த வேலைகளும் முடியும்நிலையில் இருப்பதால் 'பூமராங்' படத்தை ரிலீஸ் செய்ய கண்ணன் திட்டமிட்டுள்ளார்.
அதற்குமுன்னதாக இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். விசேஷமான ஆடி -18 வெள்ளிக்கிழமை என்பதால் பூமராங் இசை வெளியீட்டுக்கான தேதியை ஆகஸ்ட் 3-ஆம் தேதி அன்று தேர்வு செய்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் தமிழ் 'டார்லிங்-2' படங்களுக்கு இசை அமைத்த ரதன், பூமராங் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
பூமராங் படத்துக்கு முன் கவுதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படத்தை இயக்குனர் கண்ணனின் MASALA PIX என்ற நிறுவனம் தயாரித்தது. அந்தப்படம் திரைக்கு வந்த இரண்டு நாட்களில் தியேட்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் நல்ல படம் என பெயர் எடுத்தும் வசூலில் கோட்டை விட்டது. இதனால் நஷ்டமும் ஏற்பட்டது.
ஆகவே பூமராங் படம் அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் என பெரிதும் நம்புகிறார் இயக்குநர் கண்ணன்.