'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சின்னத்திரை புகழ் கவினுடன் ரம்யா நம்பீசன் நடித்துள்ள படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா. இதனை சிவகுமார் அரவிந்த் இயக்கி உள்ளார். தரண் இசை அமைத்துள்ளார், வனிதா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. லிப்ரா புரொடக்ஷ்ன் வெளியிடுகிறது.
இந்தப் படம் வருகிற 27-ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரைப்பட விநியோகஸ்தர் மலேசியா பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மலேசியா பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தரிடம் இருந்து வாங்கினேன். இதற்காக ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி இருக்கிறேன். ஆனால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் போலீசிலும் புகார் அளித்தேன். பணத்தை தராமல் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் படத்தை வருகிற 30ந் தேதி வரை வெளியிட தடைவிதித்தது.