இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த வருடத்தில் இதுவரை வந்த படங்களில் அனைவராலும் பாராட்டப்பட்டு, ரசிக்கப்பட்ட ஒரே படம் மகாநடி. நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை உண்மைக்கு வெகு அருகில் சொன்ன படமாக அந்தப்படம் அமைந்தது.
தெலுங்கில் நேரடியாக உருவாக்கப்பட்டு, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியது. படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்களான கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா ஆகியோரில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இந்தப் படம் மிகப் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.
படம் வெளிவருவதற்கு முன்பு இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறுமா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், கீர்த்தி சுரேஷின் பொருத்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், படத்தில் முக்கியமான சம்பவங்கள் யதார்த்தமாய் இடம் பெற்றதாலும் படத்தை நெருக்கமாக ரசிக்கவும் முடிந்தது.
இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தெலுங்கில் மொத்தமாக 75 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலித்திருக்கிறது. மொத்தமாக இந்தப் படம் சுமார் 40 கோடிக்கும் அதிகமான பங்குத் தொகையைக் கொடுத்து லாபகரமாக அமைந்துள்ளது.
தமிழிலும் இந்தப் படம் நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தால் அந்த லாபத் தொகை இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.